உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

 வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

வானுார்: வானுார் அருகே பைக்கில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரசானுார் கிராமத்தில் உள்ள மயிலம் சாலையில் வானுார் சப் இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் லிங்காரெட்டிபாளையத்திலிருந்து மயிலம் நோக்கி பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பையில் புதுச்சேரி மதுபாட்டில்கள் 64 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஆனபோகி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 29; என்பது தெரியவந்தது. இவர் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி தமிழக பகுதியில் விற்க கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, வெங்கடேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ