உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

செஞ்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.செஞ்சி அடுத்த கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார், 31; திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே நடந்து சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தார்.உடன் அவரை மீட்டு சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ