உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா போட்டி

அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா போட்டி

விழுப்புரம், : விழுப்புரம் அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா போட்டி நடந்தது.தமிழகத்தில் அரசு பள்ளி கல்வித் துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில், விழுப்புரம் மாவட்ட மைய நுாலகம், விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி இணைந்து நடத்திய 2 நாள் போட்டிகளை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தொடக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் குணசேகர் வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட நுாலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட நுாலக அலுவலர் காசீம் நோக்கவுரை ஆற்றினார். மாவட்ட மைய நுாலக வாசக வட்ட தலைவர் சொக்கநாதன் சிறப்புரையாற்றினார். மைய நுாலகர் இளஞ்செழியன், நுாலகர் அன்பழகன் வாழ்த்திப் பேசினர். நிறைவாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன், முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 4,000 ரூபாய், மூன்றாம் பரிசு 3,000 ரூபாய் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ