உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்டல அளவில் எறிபந்து போட்டி

மண்டல அளவில் எறிபந்து போட்டி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் பெண்களுக்கான எறி பந்து போட்டி நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த புதுச்சேரி மண்டல அளவில் பெண்களுக்கான எறி பந்து போட்டியை கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.போட்டியில் சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரி மாணவிகள் முதலிடத்தையும், வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் வென்றனர். கல்லுாரி முதல்வர் டாக்டர் வெங்கடேஷ் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பைகள், பரிசு வழங்கினார்.புதுச்சேரி மண்டல பாலிடெக்னிக் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் டாக்டர் அருண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்