| ADDED : பிப் 10, 2024 04:21 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுப்பகுதி கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள், அன்னதானம் நடந்தது.* சங்கரன் கோயில் ரோட்டில் பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது.* சேத்துார் அழகிய நாயகி அம்பாள் உடனுரை திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை முடிந்து நடுவக்குளம் கண்மாயில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.ராஜபாளையம் சொக்கர் கோயில், மாயூர நாத சுவாமி கோயில், மாரியம்மன் கோயில், மலை முந்தல் விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.