| ADDED : ஜன 06, 2024 05:21 AM
சேத்துார்: சேத்தூர் அருகே தேவதானம் கோவிலூர் பகுதியில் பயிரிட ப்பட்டிருந்த கதிர்கள் தொடர் மழையால் மண்ணில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடுகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்துார் அருகே தேவதானம் பெரியகுளம், வாண்டையார்குளம் கண்மாய் பாசன பகுதியில் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிற் விவசாயம் நடந்து வருகிறது.இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 120 நாள் பயிரான கர்நாடக பொன்னி, குறுகிய கால பயிரான முந்தானை முடிச்சு உள்ளிட்ட ரகங்களை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரம் பெய்த கன மழையால் சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.தேவதானம் கோவிலுார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அலெக்சாண்டர், அருஞ்சுனை செல்வமணி, மாரியப்பன், சரஸ்வதி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மண்ணில் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளது. பாதிப்புகளை கணக்கிட்டு இழப்பீடு வழங்க என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி அலெக்சாண்டர்: ஏக்கருக்கு ரூ.20,000 வரை செலவு செய்து அறுபடை பருவத்தை எட்டி உள்ள நிலையில் மண்ணில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் வழிந்து வரும் நிலையில் இரண்டு நாட்களில் பயிர்கள் அழுகியும், நீர் வற்றினால் முளைத்தும் பாதிப்பு ஏற்படும். துறை அதிகாரிகள் தாமதிக்காமல் சேதமடைந்த பகுதியில கணக்கிட்டு இழப்பீடு வழங்க வழி காண வேண்டும்.