உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் கைது

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் கைது

விருதுநகர்:விருதுநகரில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் சூலக்கரையைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் பாண்டி 54, கைது செய்யப்பட்டார்.விருதுநகர் அருகே குல்லுார்சந்தை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குல்லுார்சந்தை மேற்கு தெருவில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு சோதனை செய்தனர். தெருவின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வேனில் 30 பிளாஸ்டிக் பைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி, அந்த கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை யாருக்கும் தெரியாதவாறு தார் பாய் போட்டு மூடி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். விசாரணையில் குல்லுார்சந்தை இலங்கை அகதிகள் முகாம் ரேஷன் கடையின் விற்பனையாளரான சூலக்கரை பாண்டி இக்கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. இவரை கைது செய்து விருதுநகர் ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை