உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் வாக்காளர் பட்டியலில் 200 பெயர்கள் மிஸ்ஸிங்: மக்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்துாரில் வாக்காளர் பட்டியலில் 200 பெயர்கள் மிஸ்ஸிங்: மக்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏ.ராமலிங்கபுரத்தில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இல்லாததால், அப்பகுதி மக்கள் ஓட்டு போட அனுமதி மறுத்ததால் வாக்காளர் அடையாள அட்டைகளை ரோட்டில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தென்காசி தனி லோக்சபா தொகுதி உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் ஏ.ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இங்கு நேற்று 810 பேருக்கு மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருந்துள்ளது. 200க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது.இந்நிலையில் அந்த ஓட்டு சாவடி மையத்தில் நேற்று காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை 132 ஓட்டுகள் மட்டுமே பதிவான நிலையில், பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்களும், கிராம மக்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ரோட்டில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள அனைவரும் ஓட்டு போட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் முத்துமாரி, இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பொதுமக்களிடம் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து தங்களுக்கு அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன், இதனால் தாங்கள் ஓட்டுரிமை இழந்துள்ளதற்கு அரசு அதிகாரிகளே காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினார். தொடர்ந்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் சமாதானம் செய்தும் பொதுமக்கள் கேட்கவில்லை. பட்டியலில் விடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஓட்டுரிமை உள்ளவர்களும் ஓட்டு போட மறுத்தனர். இதனையடுத்து சிவகாசி சப் கலெக்டர் விஸ்வநாதனும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் மாலை 4:00 மணியை கடந்தும், ஓட்டுச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி