| ADDED : ஜூலை 28, 2024 04:21 AM
காரியாபட்டி, : தமிழகத்தில் 2.23 கோடி பேர் ரேஷன் கார்டு பெற்றுள்ளனர்., என அமைச்சர் தங்கம் தென்னரசு ரேஷன்கடைகளை திறந்து வைத்து பேசினார்.காரியாபட்டி கரியனேந்தல், பந்தனேந்தலில் பயணியர் நிழற்குடை, பி.புதுப்பட்டி, நாகம்பட்டியில் கலையரங்கம், பாம்பாட்டியில் ஊராட்சி கட்டடம், சொக்கம்பட்டி, ஜோகில்பட்டியில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் புதிய ரேஷன் கடைகளை திறந்து வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் மட்டும் தான் பி.டி.எஸ்., எனும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 2.23 கோடி பேர் ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று கிடையாது. சில வரம்புகள் இருக்கும்.சில மாநிலங்களில் அரிசி, பருப்பு மட்டும் வழங்குவதாக இருக்கும். நமது மாநிலத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் அரிசி, பருப்பு, பாமாயில் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கக்கூடிய திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.இவ்வாறு அவர் பேசினார்.