உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 4 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

4 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

சிவகாசி, சிவகாசி பகுதியில் விதி மீறி இயங்கிய நான்கு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.சிவகாசி தீப்பெட்டி தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் வி.சொக்கலிங்கபுரத்தில் சிவசக்தி பட்டாசு ஆலையில் ஆய்வு செய்ததில் அதிக ஆட்கள் மூலம் அனுமதி இல்லாத இடங்களில் பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது.செவல்பட்டியில் அழகம்மாள் பட்டாசு ஆலை, குண்டாயிருப்பு கிராமத்தில் கிரித்திக் ரிஷி பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்ததும், குண்டாயிருப்பில் வர்தினிஷ் பட்டாசு ஆலையில், வேறொரு நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட லேபிளைக் கொண்டு புல்லட் வெடி உற்பத்தி செய்ததும் ஆய்வில் தெரியவந்தது.இதையடுத்து இந்த 4 ஆலைகளின் உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை