| ADDED : ஜூன் 01, 2024 03:59 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 61 ஆயிரத்து 802 நபர்களுக்கு ரூ.45.87 கோடிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதன் செய்திக்குறிப்பு: இன்னுயிர் காப்போம் திட்டத்தில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே செய்யும். இதன் மூலம் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழகத்தின் எல்லைக்குள் ஏற்படும் விபத்துகளில் காயமடைவோர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 61,802 நபர்களுக்கு ரூ.45.87 கோடிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.