உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் வயர் உரசி கரும்பு தோட்டத்தில் தீ

மின் வயர் உரசி கரும்பு தோட்டத்தில் தீ

ராஜபாளையம் : சேத்துார் அருகே சோலைசேரியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சொந்தமான நிலத்தில் 5 ஏக்கருக்கு கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு தோட்டத்திற்கு மேல் சென்ற மின் வயர் காற்றில் ஒன்றுடன் ஒன்று உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு பலத்த காற்றில் தீ வேகமாக பரவியது.ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் வீரர்கள் தீயை மேலும் பரவாத படி கட்டுப்படுத்தினர். இருப்பினும் இரண்டு ஏக்கர் அளவிற்கு தீயில் கருகி கரும்பு சேதமானது.சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை