உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே விளாம்பட்டியில் வீட்டில் தீப்பிடித்து கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.சிவகாசி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முக கனி 76. இவர் நேற்று காலை 6:30 மணிக்கு தனது குடும்பத்தினருடன் விருதுநகர் கன்னிசேரி அருகில் உள்ள குலதெய்வத்திற்கு சுவாமி கும்பிடச் சென்றார். இந்நிலையில் காலை 11:00 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதில் வீட்டிலிருந்த கட்டில் பீரோ, பிரிட்ஜ், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். விசாரணையில், மின் கசிவினால் தீப்பிடித்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை