மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
11 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
11 hour(s) ago
சிவகாசி : வெம்பக்கோட்டை எதிர்க்கோட்டையில் ரூ.30 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளோடு உருவாக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் சிதிலமடைந்து வருவதோடு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இங்கு அனைத்து விளையாட்டு உபகரணங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ள தளங்கள், சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் உருவாக்கப்பட்டது.ஓய்வு எடுக்க இருக்கைகள் , ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே சுகாதார வளாகம் உள்ளது. உடற்பயிற்சி கூடம் சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது உடற்பயிற்சி கூடம் வளாகம் முழுவதுமே முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. நடைப்பயிற்சி தளங்கள், இருக்கைகள், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்டவைகள் என அனைத்தும் சேதமடைந்து விட்டது. சுகாதார வளாகமும் பயன்பாட்டில் இல்லை.தவிர உடற்பயிற்சி கூடம் மது அருந்த, சூதாட என சமூக விரோதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது. உள்ளே மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. ரூ. 30 லட்சத்திற்கு உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் வீணாகி வருவதால் விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடற்பயிற்சி கூடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago