உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் ஆலோனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பள்ளி வளாகம், வகுப்பறை, குடிநீர் தொட்டி, கழிப்பறை முழுமையாக சுத்தம் செய்வது, மாணவர்களுக்காக ஆதார் மையங்கள் அந்தந்த பள்ளிகளில் துவக்குதல், பள்ளி வயதுக்குழந்தைகள், செல்லாக்குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பள்ளிகள் திறந்த பின் மாணவர்களுகுக்கு தவறாமல் வழங்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இதில் திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை