மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
ராஜபாளையம்: கண்மாயில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை, கொட்டப்படும் குப்பை கழிவுகள், படர்ந்துள்ள முட்புதர்கள், களம் ஆக்கிரமிப்பு போன்ற சிக்கல்களால் விவசாயிகள் பாதிப்பில் உள்ளனர்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒட்டி தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடம்பன்குளம் கண்மாய் உள்ளது. கொண்டனேரி கண்மாய், திருச்சாலுார், பிரண்டை குளம் கண்மாய்களின் நீர் ஆதாரமாக இருப்பதால் முதல் மழைக்கே கண்மாயில் நீர்வரத்து காணப்படும்.நுாறு ஏக்கருக்கும் அதிகமாக பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்மாயில் ஆண்டிற்கு இரண்டு போகம் முழுமையாக நெற்பயிர் மட்டும் விவசாயம் நடந்து வருகிறது.அருகாமை கண்மாயிலிருந்து கழிவு நீர் கலப்பதால் ஆகாய தாமரை படர்ந்து கண் மாயை பசுமை போர்வையால் மூடியது போல் காணப்படுகிறது.நகர் பகுதி ஒட்டியுள்ளதால் நகராட்சி, குடியிருப்புகளின் குப்பைகள், கட்டடக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை், மருத்துவ கழிவுகளையும் ஆள் இல்லாத இரவு நேரங்களில் குவித்து செல்கின்றனர்.நீர்ப்பிடிப்பு பகுதியின் உட்பகுதியில் பாலத்தை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட மண் அகற்றாமல் உள்ளதால் மண் மேடாகி விட்டது.இதனை ஒட்டி உள்ள கம்மாபட்டி பகுதியின் குடியிருப்புவாசிகள் போட்டி போட்டு வீடுகள், மாட்டு தொழுவங்களை அமைத்து வருவதால் கண்மாயின் பகுதியும் சுருங்கி வருகிறது. அதிகாரிகள் ஆக்கிரமிப்பை முறையாக அகற்றாததால் நீர் பிடிப்பு பகுதி சுருங்கி இரண்டாம் போகத்திற்கான அவசிய காலங்களில் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.விளை பொருட்கள் உலர்த்துவதற்கான களம் பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கண்மாயின் கரைகள் அளவீடு செய்து தெற்கு பகுதியான பாசன நிலம் ஒட்டிய இடங்கள் உயர்த்தப்படாமல் உள்ளதால் கண்மாய் நிறையும் போது குடியிருப்புகளுக்குள் நீர் உட்புகுந்து அருகாமை விவசாய பகுதிகள் மூழ்கி ஷட்டர்களை திறந்து விட விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.பிரச்சனை குறித்து கலெக்டர் வரை முறையிட்டும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.கண்மாய் முழுவதும் ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள், ஆகாயத்தாமரைகளை அகற்றவேண்டும். குடியிருப்புகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படும்போது எதிர்ப்பு அதிகமாகி ஆக்கிரமிப்பாளர்களுடன் அடிதடி பிரச்சனையாகி முடிகிறது. கண்மாயின் எல்லையை கண்டறிந்து கரைகளை உயர்த்தி நீர் பிடிப்பு ஆதாரங்களை காக்க வேண்டும்.-வனராஜ், பாசன விவசாயிகள் சங்க உறுப்பினர்.
நகர் பகுதியில் ஒட்டி கண்மாய் கரை உள்ளதால் கழிவுகளை சுலபமாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். கண்மாய் நடுவே செல்லும் பாலத்தை அகலப்படுத்தும் போது இதற்கு தீர்வு காணும் விதமாக கம்பி வேலி அமைத்து தடுக்கப்படும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் அறிவித்து சென்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தற்போது வரை இதற்கான நடவடிக்கை இல்லாததால் கழிவுகள் கொட்டப்பட்டு கண்மாய் நீர்ப்பிடிப்பு உயரம் குறைந்து வருகிறது.-நாகராஜன், விவசாயி.
12 hour(s) ago
12 hour(s) ago