| ADDED : ஜூன் 21, 2024 03:49 AM
காரியாபட்டி: குடிநீர் ஆதாரமாக இருக்கும் தோப்பூர் கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரியாபட்டிய ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.காரியாபட்டியில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முத்துமாரி தலைமையில், துணைத் தலைவர் ராஜேந்திரன், பி.டி.ஓ., கள் கற்பகவள்ளி, போத்திராஜ் முன்னிலையில் நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதம்:திருச்செல்வம், அ.தி.மு.க.,: அரசகுளத்தில ரோடு போட நிலம் எடுக்க நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்ததாக ரூ. பல லட்சங்கள் செலவு காண்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் பத்திரிகையாளர்கள் இருக்கும் போது வெளியூரில் ஏன் கொடுத்தீர்கள்.மகாலட்சுமி, தி.மு.க., : சோலைகவுண்டன்பட்டியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி படுமோசமாக உள்ளது. அப்புறப்படுத்தி புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும். கருணாநிதி கனவு இல்லம் மற்ற பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு வரவில்லை.தேம்பாவணி, அ.தி.மு.க.,: சிங்கநாதபுரம் கண்மாய் படு மோசமாக இருக்கிறது. தினமலர் நாளிதழில் கூட செய்தி வந்துள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாகர்பாண்டீஸ்வரி,அ.தி.மு.க., :சிதம்பராபுரம், சிவலிங்காபுரம் மயானத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது. காரைக்குளம் கண்மாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். மன்றத்தில் பேசுவதோடு சரி அதற்குப்பின் எந்த நடவடிக்கையும் இல்லை .முருகன், அ.தி.மு.க.,:தோப்பூர் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக அங்குள்ள கண்மாய் இருந்து வருகிறது. காரியாபட்டி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கண்மாயில் கலப்பதால் குடிநீர் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உமையீஸ்வரி, தி.மு.க.,:பிசிண்டி, அச்சங்குளம் மயானத்தில் அடிப்படை வசதி கிடையாது. எஸ். கல்லுப்பட்டியில் பேவர் பிளாக் கற்கள் பணிக்கனேந்தலில் குளியல் தொட்டி கட்ட வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.