உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லாட்ஜ்களில் சமூக விரோத செயல்கள்: தயங்கும் போலீசார்

லாட்ஜ்களில் சமூக விரோத செயல்கள்: தயங்கும் போலீசார்

விருதுநகர், : விருதுநகரில் இயங்கும் சில லாட்ஜ்களில் மது குடித்து, அறை எடுத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இங்கு போலீசாரை சோதனை செய்ய விடாமல் அரசியல்வாதிகளின் பெயர்களை கூறி தடுத்து நிறுத்தும் சம்பவங்கள் தொடர்கிறது.விருதுநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில், மதுரை ரோடு, நான்கு வழிச்சாலை அருகே 20க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் இயங்குகின்றது. இதில் சில லாட்ஜ்களில் பார், அறை என இரண்டுமே உள்ளது. இங்கு மது குடித்து விட்டு ரோட்டில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் காலையிலேயே மது பாட்டில்கள் விற்பனை படு ஜோராக நடக்கிறது.இதில் பாருடன் செயல்படும் சில லாட்ஜ்களில் மது குடித்து விட்டு, அங்கேயே அறை எடுத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் அருகே உள்ள வீடுகளை சேர்ந்த பணிக்கு போகும் பெண்கள், மாணவிகள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர். இங்கு நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து தெரிந்து போலீசார் சோதனை செய்வதற்காக செல்லும் போது அரசியல் வாதிகளின் பெயர்களை கூறி தடுத்து நிறுத்துகின்றனர்.இது போன்ற தவறான செயல்கள் பகல் நேரத்திலேயே நடப்பதால் வெளியூரில் இருந்து வருபவர்கள் குடும்பங்களுடன் சென்று லாட்ஜில் அறை எடுத்து தங்குவதற்கு அஞ்சுகின்றனர். எனவே மாவட்டத்தில் நகர் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை