உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வங்கியில் பணி நியமன ஆணை

வங்கியில் பணி நியமன ஆணை

விருதுநகர் : விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி மாணவர்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணிக்காக விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கத்தால் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்க கல்லுாரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் நேர்முகத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் 21 பேர் பணி நியமன ஆணை பெற்றனர்.இவர்களை கல்லுாரித் தலைவர் பழனிச்சாமி, உப தலைவர்கள் ராஜமோகன், ரம்யா, செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிபாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தினர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி