| ADDED : ஆக 22, 2024 02:20 AM
சிவகாசி: சிவகாசி அருகே செவலூர் கண்மாயில் மண் அள்ளிய போது, பறிமுதல்செய்த வாகனங்களை விடுவிக்கக் கோரி சப் கலெக்டர் அலுவலகம் முன் இருவர் தீக்குளிக்க முயன்றனர். சிவகாசி அருகே செவலுார் கண்மாயில் விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று மண் அள்ளி வந்தனர். ஆக. 19 ல் கண்மாயில் ஆய்வு செய்த சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் விதிமீறி கண்மாயில் மண் எடுப்பதாக கூறி, 3 டிராக்டர், 1 மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார். இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணியளவில் பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்கக்கோரி வாகனங்களில் உரிமையாளர்கள் ரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பின் சப் கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் புகழேந்தி பேச்சு வார்த்தை நடத்தி, கண்மாயில் மண் எடுப்பதில் விதிமீறல் உள்ளதா என ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்ததைஅடுத்து கலைந்து சென்றனர்.வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே அரசு கட்டணம் இன்றி எடுக்க அனுமதி அளித்துள்ளது. அனுமதி பெற்ற இடத்தில் விவசாய நிலத்தில் மண் கொட்டப்படாமல் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுஉள்ளது. வேறு பயன்பாட்டிற்கு கண்மாயிலிருந்து மண் எடுத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.