மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது.ஏப்ரல் 23ல், கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அக்னிசட்டி ஏந்தி வந்தனர். இரவு பூக்குழி விழா நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago