உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / படிப்புடன் வேலை வாய்ப்பு பயிற்சி தரும் பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி

படிப்புடன் வேலை வாய்ப்பு பயிற்சி தரும் பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி

ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலை பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி தாளாளர் மாடசாமி கூறியதாவது;ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி மொட்டமலையில், 2009ல் ஏ.எம்.பி. கல்வியியல் அறக்கட்டளை சார்பில் பாலகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.மிக குறைவான கல்வி கட்டணம் வசூலிக்கும் நாங்கள் முதலில் 5 பாடப்பிரிவுகளுடன் கல்லூரியை துவக்கினோம். தற்போது பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.காம். (சி.ஏ.,) பி.பி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய இளங்கலை பாடங்களும், முதுநிலை பிரிவில் எம்.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என 8 பாடப்பிரிவுகளோடு இயங்கி வருகிறது.மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி, காவல்துறை ,இந்திய ராணுவ பணிகளுக்கு செல்ல போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பகுதி நேர வேலை வாய்ப்பு, ஊனமுற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள், மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகளும் எங்கள் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக இறுதியாண்டு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம்.முதல்வர் அருண் தலைமையில் அனுபவம் உள்ள பேராசிரியர்கள், பஸ் வசதி, குறைந்த கட்டணம், ஆண்களுக்கான விடுதி வசதி, கல்லூரி கட்டண சலுகை போன்ற சிறப்பு அம்சங்களுடன் தற்போது 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை