உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., ஆய்வுக்கூட்டம்

பா.ஜ., ஆய்வுக்கூட்டம்

விருதுநகர்- விருதுநகரில் பா.ஜ., சார்பில் லோக்சபா ஆய்வு கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் வரவேற்றார். மாநில செயலாளர் பொன் பாலகணபதி தலைமை வகித்து பேசுகையில், “2024 லோக்சபா தேர்தலில் திராவிட கட்சிகளை எதிர்த்து நன்றாக பணி செய்துள்ளோம். அனைத்து பூத்களிலும் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளோம். வரும் நாட்களில்நேரடியாக மக்களிடம் சென்று தி.மு.க., அரசின் அவலங்களை கூறி 2026 சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்,” என்றார்.ஆய்வுக்கூட்டம் பற்றிய தகவல்கள் குறித்து மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் பேசினார். விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மேற்கு மாவட்ட தலைவர் சரவணராஜா, மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் பேசினர். லோக்சபா தேர்தலில் பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளும், பூத் கமிட்டி பொறுப்பாளர்களும் தங்கள் ஆலோசனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை