உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரம்மோற்ஸவ வீதி உலா

பிரம்மோற்ஸவ வீதி உலா

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா நடந்து வருகிறது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறவின் முறை மண்டகப்படியார்கள் நடத்தும் விழாவில் சுவாமி, அம்மன் வீதி உலா வருவர். 6ம் நாள் விழாவாக புளியம்பட்டி கம்மவார் உறவின்முறை மண்டகப்படியை முன்னிட்டு சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். ஜூன் 19ல் கோயில் வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும். 20ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை