உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

விருதுநகர்: விருதுநகர் அருகே கோட்டூர் ரோட்டில் அப்பையநாயக்கன்பட்டி அருகாமையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் நிலத்தில் சென்று வீணாகிறது.மாவட்டத்தில் கண்மாய், நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. பல கண்மாய்கள் வறண்ட பூமியாக மாறிவிட்டது. விருதுநகர், அதனை சுற்றிய பகுதிகளில் ஏற்கனவே 3 முதல் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் விருதுநகர் அருகே கோட்டூர் ரோட்டில் அப்பையநாயக்கன்பட்டி அருகே குடிநீர் குழாய் உடைந்து அருகாமையில் உள்ள நிலத்தில் குடிநீர் வீணாகும் நிலை உள்ளது. இப்பகுதி வழியாக செல்லும் குடிநீர் குழாயில் எப்போது எல்லாம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதோ அப்போது எல்லாம் சேதமான குழாய் வழியாக குடிநீர் வெளியேறுகிறது .எனவே சேதமான குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்