உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழில் நிறுவனங்களுக்கு மானியம் பெற அழைப்பு

தொழில் நிறுவனங்களுக்கு மானியம் பெற அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் காப்புரிமை, வர்த்தக முத்திரை பதிவு, புவியியல் குறியீடுகள் பெற ஆன செலவை மானியமாக பெற அறிவுசார் சொத்துரிமைக்கான மானியம் என்ற திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.காப்புரிமை பதிவு செய்த செலவில் 75 சதவீத தொகை, வர்த்தக முத்திரை பதிவு, புவியியல் குறியீடுகள் பதிவுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்த செலவில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. வர்த்தக முத்திரை படம் பெறும் தீப்பெட்டி நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், பேண்டேஜ் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.பதிவுகள் பெற்ற ஆறு மாத காலத்திற்குள் இணையதளம் மூலம் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவும், 90800 78933, 99440 90628 என்ற எண்கள் வழியாகவும் அழைக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்