உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுரங்கப்பாதை பணிக்காக ரயில் நேரம் மாற்றம்

சுரங்கப்பாதை பணிக்காக ரயில் நேரம் மாற்றம்

ராஜபாளையம்,:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையின் கான்கிரீட் பிளாக்குகளை தண்டவாளத்தின் இடையே புதைக்கும் பணிக்காக செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ராஜபாளையத்தில் நடைபெறும் சுரங்கப்பாதை பணிகளுக்காக டி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இடையே சிமென்ட் பிளாக்குகள் தண்டவாளம் அடியில் புதைக்கப்பட உள்ளன. இதற்காக ரயில் தண்டவாளங்களும் மின்கம்பிகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட உள்ளதால் ரயில் நேர மாற்றம் தேதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் (06664) ஆக. 26, 27 செப்.8, 9ல் 50 நிமிடம் கால தாமதமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 12:10க்கு பதில் 1:00 மணிக்கு புறப்படும். ராஜபாளையத்திலிருந்து மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு மாலை 4:30 க்கு மதுரை சென்று சேரும். இதன் படி பயண திட்டத்தை அமைத்து கொள்ள வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை