உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்தில் துாய்மை பணியாளர் பலி

விபத்தில் துாய்மை பணியாளர் பலி

ராஜபாளையம், : ஸ்ரீவில்லிபுத்துார் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் முத்துக்காளை 28, ராஜபாளையம் மலையடிப்பட்டியில் உள்ள மைத்துனர் வீட்டில் மனைவி குழந்தையுடன் தங்கி தற்காலிக துாய்மை தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்துள்ளார்.நேற்று முன்தினம் மம்சாபுரத்தில் உறவினருடன் துப்புரவு பணி செய்துவிட்டு மாலை 4:00 மணிக்கு டூவீலரில் திரும்பியுள்ளார்.ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு காயல்குடி ஆற்றின் அருகே வந்தபோது முன்னால் சென்ற மினி லாரி திடீரென பிரேக் போட்டதில் (ஹெல்மெட் அணியவில்லை) லாரியின் பின்பக்கம் முத்துக்காளை மோதியதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ