உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

சேத்துார் : ராஜபாளையம் தாலுகா கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து மனுவை பெற்றுக் கொண்டார். பல்வேறு துறைகள் சார்பில் 985 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் வருவாய்த் துறையில் 20, காப்பீட்டு திட்டம் 34 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.தாலுகா பகுதியில் உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஆதி திராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ், சப் கலெக்டர் காளிமுத்து, தாசில்தார் முத்துப்பாண்டி, பி.டி.ஓ., ராமமூர்த்தி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை