உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் கலெக்டர் ஆய்வு

சிவகாசியில் கலெக்டர் ஆய்வு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சிவகாசி மாநகராட்சி பெரியார் காலனியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், கவிதா நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பூங்கா உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைவாகவும் தரமானதாகவும் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை