உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலெக்டருடன் கல்லுாரி மாணவிகள் கலந்துரையாடல்

கலெக்டருடன் கல்லுாரி மாணவிகள் கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்ட கலெக்டர் உடன் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்துரையாடினர்.மதுரை வேளாண்மை கல்லூரியின் மாணவிகள்பொன்னூரி சுஸ்மா, செளமியா, உபகார ரோஸ்வின்,வர்தினி, வாசுகி, யஸ்வினி,யுவராணி, யுவஸ்ரீ ஆகியோர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை சந்தித்தனர். அருப்புக்கோட்டை கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டம் குறித்து மாணவிகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார்.மாணவிகளின் திட்ட பணிகளை விசாரித்தும், வேளாண்மை தொழில்நுட்பங்களின் பரவலாக்கள் குறித்தும், அதன் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் பேசினார். வேளாண்மையின் எதிர்காலம், மாணவர்களுக்கான அரிய வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், முதுகலை மேற்படிப்புகள், பல்வேறு அறியப்படாத தேர்வுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பற்றி விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்