உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிேஷக பூஜைகள் துவக்கம்

வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிேஷக பூஜைகள் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹாலட்சுமி ஹோமம் தனம், தானிய பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர்.இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து ஜூன் 2 காலை 7:45 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளது.நேற்று காலை 9:05 மணிக்கு ரகு பட்டர் தலைமையிலான பட்டர்கள் குழுவினர் மஹாலட்சுமி ஹோமம் மற்றும் தன, தானிய பூஜைகளையும், மாலை 5:30 மணி முதல் வாஸ்து சாந்தி, பிரவேச பலி பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து மணிகண்டன், பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை