| ADDED : ஆக 02, 2024 06:46 AM
விருதுநகர் : விருதுநகர் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்ததை கண்டித்து இந்திய கம்யூ.,மாநிலக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் தலைமையில் தேசபந்து மைதானம் அருகே அஞ்சல் அலுவலகத்தின் முன்பு மறியல் பேராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற 269 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.*ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு நிர்வாகி திருமலை மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட 186 பேரை போலீசார் கைது செய்தனர்*ராஜபாளையத்தில் இ.கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி தலைமை வகித்தனர். 23 பெண்கள் உட்பட 172 பேர் கைதாகினர்.