| ADDED : ஜூலை 12, 2024 04:04 AM
விருதுநகர்: மலைவாழ் மக்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட தலைவர் கருப்புச்சாமி, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு சின்னமூப்பன்பட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்துார் ஆகிய ஊர்களில் ஹிந்து காட்டு நாயக்கன் மக்கள் வசிக்கின்றனர்.2012ம் ஆண்டில் ஹிந்து காட்டு நாயக்கன் என சாதி சான்று வாங்கப்பட்டுள்ளது. 2022ல் சாதிச்சான்று கேட்டு அருப்புக்கோட்டை, சாத்துார் ஆர்.டி.ஓ.,க்களிடம் மனு கொடுக்கப்பட்டும் தற்போது வரை நடவடிக்கை இல்லை.மதுரை காமராஜர் பல்கலை மானுடவியல் வல்லுனர் ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் சான்று கொடுப்பதற்கு 2008ல் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.ஆனால் தற்போது சாதி சான்று வழங்கப்படுவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு பறிபோகிறது. முறையான விசாரணை செய்து உரிய காலத்தில் சாதி சான்று வழங்க ஆர்.டி.ஓ.,க்கு உத்தரவிட வேண்டும், என்றார்.