உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் மாட்டு வண்டிகள், வாகனங்கள்

போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் மாட்டு வண்டிகள், வாகனங்கள்

நரிக்குடி : நரிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள், வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கிடப்பதால் வீணாகி வருகிறது.நரிக்குடி பகுதிகளில் கிருதுமால் நதி, ஓடைகள் உள்ளிட்டவைகளில் கிடக்கும் மணலை மாட்டு வண்டிகள், லாரி, டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருடுகின்றனர். அவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படுகிறது. வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.வெயில், மழைக்கு துருப்பிடித்து சேதமடைகிறது. உரிய தண்டனை பெற்று, அபராதம் செலுத்தி வாகனத்தை மீட்கும் போது பெரும்பாலான உதிரி பாகங்கள் பயன்பாடு இன்றி போகிறது. வாகனங்களை சீரமைக்க பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க பெரும்பாலானவர்கள் வாகனங்களை மீட்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.துருப்பிடித்து பயன்பாடின்றி போகிறது. திறந்தவெளியில் கிடப்பதால் உதிரி பாகங்கள் காணாமல் போகிறது. வீணாவதை தடுக்க உரிய காலத்திற்குள் ஏலம் விட்டு அரசுக்கு வருவாயை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ