உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோவில் புலிகுத்தி துவக்கப்பள்ளி கூரையில் விரிசல், சுற்றுச்சுவர் சேதம்

கோவில் புலிகுத்தி துவக்கப்பள்ளி கூரையில் விரிசல், சுற்றுச்சுவர் சேதம்

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவில் புலிகுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூரையில் விரிசல், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்ததுள்ளது. மேலும் சேதமான சுவர்கள் விழுந்தால் குழந்தைகள் உயிரிழக்கும் நிலை உள்ளது.கோவில்புலிகுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1979 ல் துவக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்ட சுற்று சுவர்கள் ஓராண்டிற்கு முன்பு சரிந்து விழுந்தது. இந்த கட்டட இடிபாடுகளை கூட அகற்றாமல் அப்படியே விட்டு விட்டதால் இன்று வரை பள்ளியை சுற்றி கிடக்கிறது.இங்கு அஞ்சம்பட்டி, கோவில்புலிகுத்தியைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் இடைவேளைகளில் வளாகத்தில் விளையாடும் போது சேதமான சுற்றுச்சுவர்கள் அருகே நிற்கின்றனர். இந்த சுவர்கள் மாணவர்கள் மீது விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.பள்ளியின் கூரையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது. இதனால் சிமெண்ட் பூச்சுகள் மாணவர்கள் மீது விழும் நிலை உள்ளது. இதன் உறுதிதன்மை குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை எந்த வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் படிக்கும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கோவில்புலிகுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீரமைப்பு பணிகளை உடனடியாக செய்து மாணவர்களின் உயிரை காக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி