உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சுவர்கள் சேதம்

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சுவர்கள் சேதம்

விருதுநகர் : விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் சுவர்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. இதே நிலையில் இருந்தால் கட்டடம் உறுதிதன்மையற்று பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.விருதுநகர் கல்லுாரி ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த கட்டடம் முன்புறம் பார்ப்பதற்கு நன்றாக இருப்பது போல தெரிந்தாலும் பின்புறத்தின் சுவர்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.இங்கு மற்ற அரசு கட்டடங்களுக்கு அடிப்பது போல புது வண்ணம் பூசுவதற்கு எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. திறந்த போது சுவர்களுக்கு அடித்த வெள்ளை நிறம் மட்டுமே தற்போது வரை உள்ளது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருவதால் மழைக்காலத்தில் சுவர்களின் அதிகப்படியான ஈரப்பதம் ஏற்படுகிறது இதனால் கட்டடத்தின் உறுதிதன்மை, ஆயுட்காலம் குறைந்து விரைவில் சேதமாகும் நிலை உருவாகியுள்ளது.அலுவலகத்தின் பின்புறம் உள்ள சுவர்கள் என்பதால் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். மேலும் கட்டி திறக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இது போன்ற சேதமாகியுள்ளதால் கட்டடத்தின் உறுதி தன்மை அறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழையில் கட்டடத்தின் உள்ளே இருக்கும் சில பகுதிகளில் அதிகப்படியான நீருற்று காணப்படுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ