உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமாகி திறந்த நிலையில்  மின்கம்ப சுவிட்ச் போர்டுகள்: விபத்து அபாயம் விபத்து அபாயம்

சேதமாகி திறந்த நிலையில்  மின்கம்ப சுவிட்ச் போர்டுகள்: விபத்து அபாயம் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகர் நகர்ப்பகுதிகளில் குடியிருப்புகளிடையே மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மர், மின்கம்பம், தெருவிளக்கு சுவிட்ச் போர்டுகள் திறந்த நிலையில் சேதமாகி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நகரின் சில பகுதிகளில் மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மர் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. பல தெருக்களில் மிகவும் பழமையான இரும்பு அல்லாத சிமென்ட் மின்கம்பங்கள் மூலம் உயிரழுத்த மின்கம்பிகள் மின்சாரம் கடத்தி வருகின்றனர். நகராட்சியிலும், அதையொட்டிய ஊராட்சி பகுதிகளிலும் தெரு விளக்குகள் போடும் சுவிட்ச் போர்டுகள் தாழ்வாக உள்ளன. அவை திறந்த நிலையில், சேதமடைந்து காணப்படுகின்றன.மழைக்காலங்களில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2024ல் இது போன்ற திறந்த நிலை சுவிட்ச் போர்டு அருகே விளையாடிய சிறுமி உயிரிழந்தார். மழை நேரங்களில் மின் கசிவு ஏற்பட்டு சுவிட்ச் பாக்ஸ், மின்கம்பங்களிலும் டிரான்ஸ்பார்மரிலும் மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளதால் இதை சரி செய்வது அவசியமாகிறது.விபரீதத்தை உணராமல் ஓடி விளையாடும் குழந்தைகளும் மழைக்காலத்தில் இவற்றை தொட்டு விளையாடும்போது மின்சாரம் பாய்ந்து இறக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மழைக்காலத்தில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களிலேயே மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் தெருவில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் தெருவிளக்கு சுவிட்ச் பெட்டிகளில் சர்வ சாதாரணமாக மின் கசிவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.குழந்தைகளும் முதியவர்களும் மின் சாதனங்கள் அருகில் செல்லும் போது கவனமாக நடந்து செல்ல வேண்டும். மின்வாரியத்தினர் சேதமான மின்கம்ப சுவிட்ச் போர்டுகளை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை