உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த வாறுகால் பாலம்

சேதமடைந்த வாறுகால் பாலம்

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் சேதமடைந்துள்ள வாறுகால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி பண்ணை தெருவில் வாறுகால் மீது வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலம் சேதமடைந்து நடுவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. கம்பிகள் வெளியே தெரியும் இதில் தற்காலிகமாக கல்லை போட்டு மூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இரவில் சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். ஒரு ஆண்டிற்கும் மேலாக சேதம் அடைந்துள்ள பாலத்தை இதுவரையிலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே சேதம் அடைந்த வாறுகால் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை