உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த ஊராட்சி அலுவலகக்கூரை

சேதமடைந்த ஊராட்சி அலுவலகக்கூரை

சிவகாசி : வெம்பக்கோட்டை ஊராட்சி அலுவலக கூரை, கட்டடம் சேதம் அடைந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வெம்பக்கோட்டை ஊராட்சி அலுவலகம் 1986ல் கட்டப்பட்டது.இங்கு, ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி, அக்கரைப்பட்டி, எழுவன் பச்சேரி, இனாம் மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் வருகின்றனர். ஆனால் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம் அடைந்துள்ளது.தலைவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேலே கூரை பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. மேலும் மழைக் காலங்களில் கட்டடம் முற்றிலும் பெயர்ந்து விழ வாய்ப்பு உள்ளது. மேலும் அலுவலகத்திற்கு மக்கள் அச்சத்துடனே வருகின்றனர். இக்கட்டம் இடப் பற்றாக்குறையாகவும் இருப்பதால் ஊராட்சி அலுவலகத்திற்கு உடனடியாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.ஆறுமுகத்தாய், ஊராட்சித் தலைவர், ஊராட்சி அலுவலகம் கட்டடம் சேதத்தால் புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளது. இதற்காக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டம் கட்டப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை