உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டான்பெட் மண்டல மேலாளர் தகவல்

டான்பெட் மண்டல மேலாளர் தகவல்

விருதுநகர் : விருதுநகர் டான்பெட் பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தத்தில் நீடிக்கும் சிக்கல் தொடர்பாக டான்பெட் மண்டல மேலாளர் பொன்னுச்சாமி கூறியதாவது: ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து ஊழியர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., செலுத்திய விவரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்ட நிலையில் நேற்று அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர். அதில் பெட்ரோல் பங்க் 2020ல் துவங்கப்பட்டதில் இருந்து பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் சரிவர கணக்கு பராமரிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. ஊழியர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை