உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கும்  ஜனநாயகம்; பா.ஜ., மாநில செயலாளர் பேட்டி 

பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கும்  ஜனநாயகம்; பா.ஜ., மாநில செயலாளர் பேட்டி 

விருதுநகர் : பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என பா.ஜ., மாநில செயலாளர் மீனா தேவ் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட தினம் கருப்பு நாள். இப்போது காங். கட்சியினர் பார்லி., முன் நின்று அரசியலமைப்பை பா.ஜ., மதிக்கவில்லை என்று கூறுகின்றனர். மாற்ற நினைக்கிறார்கள் என கூறுகின்றனர். காங். ஆட்சி காலத்தில் தான் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. கருத்துரிமை, பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றில் கருப்பு கோடு விழுந்த நாள். அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் எமர்ஜென்சியை கொண்டு வந்தார் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா. சர்வாதிகாரம் படைத்த அந்த சட்டத்தை நள்ளிரவில் அமல்படுத்தியதை ஸ்தாபன காங். தலைவர் காமராஜர் கூட எதிர்த்தார்.பிரதமர் பதவியை தக்க வைக்க எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இதை நம் இளைய தலைமுறை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில் அனைவரும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர். இது உண்மையான வரலாறு. இப்போது பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை