| ADDED : ஜூலை 02, 2024 06:32 AM
விருதுநகர் : விருதுநகரில் சூலக்கரை அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடந்த வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம், வைட்டமின் ஏ வழங்கும் முகாமில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., கரைசல் பொடி, வைட்டமின் யு சிரப், துத்த நாக மாத்திரைகள் வழங்கும் பணியை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார். மேலும்ஓ.ஆர்.எஸ் கரைசல் தயாரிக்கும் முறை, துத்தநாக மாத்திரை உட்கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாய்மார்களுக்கு வழங்கினார்.ஜூலை 1 முதல் ஆக., 31 வரை நடக்கும் இந்த முகாமில்மாவட்டத்தில் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக 6 வயதிற்குட்பட்ட 1,28,267 குழந்தைகள் பயனடைய உள்ளனர் என கூறினார். சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தனலட்சுமி பங்கேற்றனர்.