உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் எலும்பு, மண்பானை கண்டெடுப்பு

விஜய கரிசல்குளம் அகழாய்வில் எலும்பு, மண்பானை கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் எலும்புகள், உடைந்த மண்பானை குவியல் கண்டெடுக்கப்பட்டது.விஜயகரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி என 200 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. நேற்று அகழாய்வில் எலும்புகள், உடைந்த மண்பானை குவியல் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் '' இரண்டாம் கட்டத்தைப்போலேவே மூன்றாம் கட்ட அகழாய்வுகளில் எலும்புகள், மண்பானைகள் கிடைத்து வருகின்றது. செங்கல் குவியலும் கிடைத்து வருவதால் கட்டுமான பணிகள் நடந்து மனிதன் வாழ்விடமாக இருந்திருக்கலாம் அல்லது விலங்குகளை வேட்டையாடி இருக்கலாம். கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மனிதனுக்கு உரியதா அல்லது விலங்குகளுக்குரியதா என்பது ஆய்விற்கு பின்னர் தெரியவரும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை