உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சர்வீஸ் ரோட்டில் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு

சர்வீஸ் ரோட்டில் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சர்வீஸ் ரோடுகளில் வாகனங்களை பல மணி நேரம் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.அருப்புக்கோட்டை காந்தி நகர் கோவிலில் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை உள்ளது. இங்குள்ள மேம்பால பகுதியில் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் கனரக வாகனங்கள் நான்கு வழி சாலையில் செல்லாமல் சர்வீஸ் ரோடு வழியாக வந்து பல மணி நேரம் அங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன.இதனால் சர்வீஸ் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுகிறது. சர்வீஸ் ரோடுகளில் ஒர்க் ஷாப்கள் இருப்பதால் வாகனங்கள் பழுதை சரி செய்ய சர்வீஸ் ரோடு ஓரங்களில் நிறுத்தி வைக்க படுகிறது.இதனாலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.போக்குவரத்து போலீசார் சர்வீஸ் ரோடுகளின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை