உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முறையற்ற வேகத்தடைகளால் வாகன ஒட்டிகளுக்கு தண்டுவட பாதிப்பு அபாயம்  மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

முறையற்ற வேகத்தடைகளால் வாகன ஒட்டிகளுக்கு தண்டுவட பாதிப்பு அபாயம்  மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

விருதுநகர் : முறையற்ற வேகத்தடைகளால் வாகன ஒட்டிகளுக்கு தண்டுவட பாதிப்பு அபாயம் ஏற்படுகிறது. மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, நகராட்சி, ஊரக பகுதிகளில் உள்ள ரோடுகளில் மக்கள் சிலர் தன்னிச்சையாக சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றிவேகத்தடைகளைஅமைத்துள்ளனர். வேகத்தடைகள் உரிய அளவீட்டின்படி அமைக்காததால் விபத்து ஏற்பட்டு, உயிர்சேதம், படுகாயம் ஏற்படுகிறது. முறையற்ற வேகத்தடைகளை கடக்கும் வாகன ஒட்டிகளுக்கு முதுகுதண்டுவடம், இடுப்பு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என மக்கள், வாகன ஓட்டிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.இப்புகார்களின் அடிப்படையில் நடந்த ஆய்வில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 255 வேகத்தடைகளில் 46 இடங்களில் வேகத்தடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிகிறது.அதே போல் ஊரக பகுதிகளில் உள்ள 672 வேகத்தடைகளில், உரிய அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளை கண்டறிய ஊராட்சிகள் உதவி இயக்குனர் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் உள்ள ரோடுகளில் உரிய அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்க கூடாது.அவ்வாறு அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில், அமைத்த அமைப்பினர், தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் சொந்த செலவிலேயே வேகத்தடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை