உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்ட அளவிலான கபடி போட்டி

மாவட்ட அளவிலான கபடி போட்டி

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பி.ஏ.சி ராமசாமி ராஜா நினைவு கபடி போட்டி தொடங்கியுள்ளது.ஊர்க்காவல் படை மைதானத்தில் 3 நாள் நடைபெறும் பகல் நேர போட்டிகளை சம்சுதீன் துவக்கி வைத்தார். சிவகாசி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 32 ஆண்கள் அணியும் 8 பெண்கள் அணி என 340 பேர் கலந்து கொண்டனர்.நாக்அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும் என மாநில அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் ஏ.பி.எஸ் ராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை