| ADDED : மார் 31, 2024 05:44 AM
விருதுநகர் : தொகுதியின் எல்லா பிரச்னைகளை தீர்வு காண்பேன் என நேற்று விருதுநகரில் பிரசாரத்தை துவக்கிய தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் பேசினார்.விருதுநகரில் பாண்டியன் நகரில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் பிரசாரம் துவக்கினார். இதில் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: களத்திலே அ.தி.மு.க.,வுக்கு தான் பெரிய ஆதரவு உள்ளது. நாங்கள் இருந்த போது தொகுதியில் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அ.தி.மு.க.,வின் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டன. லோப்டாப், தாலிக்கு தங்கம், மினி கிளினிக் என எல்லாமும் போச்சு. அம்மா உணவகத்தின் செயல்பாட்டை முடக்கி வருகின்றனர். சொத்து வரி, மின் கட்டணம் உயர்ந்து விட்டது, என்றார்.வேட்பாளர் விஜயபிராபகர் பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் சென்னை போய் விடுவேன் என்று நினைக்க வேண்டாம். இங்கேயே வீடு வாங்கி மக்கள் குறைகளை கேட்பேன். நான் எம்.பி., ஆனால் தொகுதியில் உள்ள எய்ம்ஸ், பட்டாசு, தீப்பெட்டி, நெசவு என எல்லா பிரச்னைகளையும் சரி செய்வேன். என்றார்.இன்றும், நாளையும் என விருதுநகர் தொகுதியில் மட்டும் நுாறு பாயின்ட்களில் பிரசாரம் செய்கின்றனர். மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், ஒன்றிய செயலர் தர்மலிங்கம் பங்கேற்றனர்.