உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீர்வரத்து ஓடைக்கு குறுக்கே பாலம் அமைக்க எதிர்பார்ப்பு

நீர்வரத்து ஓடைக்கு குறுக்கே பாலம் அமைக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர் விஸ்வநாததாஸ் காலனியை அடுத்துள்ள நீர்வரத்து ஓடையை கடக்க தற்போது மண்பாதையாக உள்ள நிலையில் அதை உயர்த்தி பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் விஸ்வநாததாஸ் காலனியை அடுத்து நீர்வரத்து ஓடை செல்கிறது. அதற்கு அடுத்துள்ள பகுதிகளிலும் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. நீர்வரத்து ஓடைக்கு குறுக்கே மண்பாதை ஒன்று தற்போது செல்கிறது. இது போதுமான அளவில் இருந்தாலும், ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்கள் சிரமப்படுவர். நீர்வரத்து ஓடை தற்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டதாலும் அதன் இருபுறமும் குப்பை கொட்டப்படுவதால் மழைக்காலத்தில் இவ்வழியை கடக்க மக்கள் திண்டாடுகின்றனர். இப்பகுதியில் தடுப்புச்சுவருடன் கூடிய பாலம் வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.இப்போது இந்த ரோடு மண்பாதையாக உள்ளதாலும், இரவில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்தை சந்திக்கின்றனர். மேலும் டூவீலரில் கணவன், மனைவியாக வந்தால் பக்கவாட்டில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் கீழே விழுந்து தடுமாறுகின்றனர். மண்பாதை பாலத்தில் எவ்வித தடுப்பு சுவரும் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.இங்கு கான்கிரீட் பாலம் அமைத்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி