உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உர பயன்பாட்டில் விவசாயிகள் விழிப்புணர்வு அவசியம்: ஏப். முதல் ஆக. வரை 4 மாதிரிகள் தரமற்றவை

உர பயன்பாட்டில் விவசாயிகள் விழிப்புணர்வு அவசியம்: ஏப். முதல் ஆக. வரை 4 மாதிரிகள் தரமற்றவை

தாவரத்தில் தண்டும்,இலைகளும் நன்கு வளர்ச்சி பெற தழைச்சத்து உரங்கள் துணை புரிகிறது. நோய் வராமல் தடுக்கவும்செய்கிறது. பூக்கள், காய்கள் நன்கு திரட்சி அடைய, விதைகள் முதிர்ச்சி பெற மணிச்சத்து அத்தியாவசியம். அதே போன்று வேரும், பழமும், வித்தும் திரட்சி பெற பொட்டாஷ் எனும் சாம்பல் சத்து முக்கிய தேவை. மண்ணிற்கு மேலும் வளம் ஊட்ட ஆடு, மாட்டு சாணம், இலை, தழை போன்ற இயற்கை பொருட்களும் உரமாக இடப்படுகின்றன. ஆனால் பல விவசாயிகள்போதிய விழிப்புணர்வு இன்றி யூரியா போன்ற உரங்களையே அதிகப்படியாக இடுகின்றனர். சாம்பல் சத்து, மணிச்சத்து, தழைச்சத்து உரங்களை இடுவதில்லை. இதனால் மண்வளம் பாதிக்கப்பட வாய்ப்புஉள்ளது. தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் நிலம், பயிர், உணவு ஆகியவை நச்சுத்தன்மை அடைகின்றன. அதிகப்படியான உரங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர்நிலைகளும் நச்சுத்தன்மை அடைகின்றன. இதை தடுக்க விவசாயிகள் சாகுபடி காலத்திலே தேவையான அளவு உரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது.மாவட்டத்தில் தற்போது யூரியா 3458 மெ.டன், டி.ஏ.பி., 886 மெ.டன், பொட்டாஷ் 400 மெ.டன், காம்பளக்ஸ் 2292 மெ.டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 220 மெ.டன் என மாவட்டத்தில் 7255 மெ.டன் அளவுக்கு உரங்கள் கூட்டுறவு, தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.இந்தாண்டுக்கு 11 வட்டாரங்களில் ஏப். முதல் ஆக. வரை எடுக்கப்பட்ட 224 உர மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 225 உர மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 4 மாதிரிகள் தரமற்றவை என உறுதி செய்யப்பட்டது. தரமற்ற உரங்கள் குறித்து கடைக்காரர்கள், நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தரமற்ற உரங்களை விற்ற விற்பனையாளர், உற்பத்தியாளர், வினியோகஸ்தர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் விவசாயிகள்தமிழ் மண் வளம் என்ற இணையதளம் மூலம் மண், ஊட்டச்சத்து நிலைக்கு ஏற்ப பரிந்துரை வழங்கப்படுகிறது. இதனை அறிந்தும் தேவையான உர அளவை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து வேளாண் இணை இயக்குனர் விஜயா கூறியதாவது: http://tnagriculture.in/mannvalam/ தளத்தில் புல எண் வாரியாக மண்ணின் ஊட்டச்சத்து நிலை, அதற்கேற்ற உர பரிந்துரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர் அமில நிலை, அங்கககரிமம், சுண்ணாம்பு தன்மை போன்ற வேதியியல் குணங்கள் பற்றிய விவரங்களும், தழை, மணி சாம்பல் சத்து போன்ற ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். எவ்வகை பயிர்கள் சாகுபடி செய்யலாம் என்றும்,தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரமிட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளும் தெரிந்து கொள்ளலாம்.அதில் குறிப்பிட்டுள்ள தேவையான அளவு உரத்தை பயன்படுத்தினால்சாகுபடி செலவு குறைந்து மகசூலும் அதிகரிக்கும். மண் வளமும் பாதிக்கப்படாது. மேலும் உர மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பல சோதனைகள் நடத்தி மாவட்டத்தில் தரமான உரங்கள் விற்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை